Skip to main content

 கர்மா...??


என் வாழ்க்கை” என்று நீங்கள் எதைச் சொல்கிறீர்களோ அது ஒரு குறிப்பிட்ட அளவிலான தகவலால் கட்டுப்படுத்தப்படும், ஒரு குறிப்பிட்ட அளவுக்கான சக்தி. இந்தத் தகவல்களை இன்றைய வார்த்தைகளில் சாஃப்ட்வேர் (மென்பொருள்) என்று அழைக்கலாம். ஒரு குறிப்பிட்ட அளவு உயிர்சக்தியானது, ஒரு குறிப்பிட்ட அளவுக்கான தகவலுடன் சக்தியூட்டப்படுகிறது. இரண்டும் இணையும் இந்த தகவல் தொழில்நுட்பம்தான் ‘நீங்கள்‘ எனப்படுவது. உங்களுக்குள் எந்தவிதமான தகவல் செலுத்தப்பட்டிருக்கிறதோ அந்தக் குறிப்பிட்ட விதமான குணாதிசயம் கொண்டவராக நீங்கள் உருவாகிறீர்கள்.

இந்த உலகத்தில் நீங்கள் பிறந்த கணத்தில் இருந்து இந்தக் கணம் வரை, எந்தவகையான குடும்பம், வீடு, நண்பர்கள், நீங்கள் செய்த விஷயங்கள், செய்யாத விஷயங்கள் – இவை எல்லாமே உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உங்களின் ஒவ்வொரு எண்ணம், உணர்ச்சி, செயல் எல்லாமே உங்களுக்குள் நீங்கள் வைத்திருக்கும் கடந்த காலப் பதிவுகளிலிருந்தே வருகின்றன. தற்போது நீங்கள் யார்? என்பதை அவைகள் தீர்மானிக்கின்றன. நீங்கள் சிந்திக்கும் விதம், வாழ்வை எந்த விதத்தில் உணர்கிறீர்கள், புரிந்துகொள்கிறீர்கள் என்பதெல்லாம் நீங்கள் எந்தவிதமான பதிவுகளை சேமித்து வைத்துள்ளீர்களோ அந்த விதமாகவே உள்ளன.

வாழ்வின் கடந்த காலப் பதிவுகள் நீங்கள் பிறந்த கணத்திற்கும் முன்னால் கடந்து செல்கிறது. ஆனால் உங்களின் தற்போதைய அனுபவத்தில், குறைந்தபட்சம் நீங்கள் பிறந்த கணத்தில் இருந்து இன்று வரை, எந்தவகையான பெற்றோர்கள், குடும்பம், நீங்கள் பெற்ற கல்வி, எந்தவிதமான மத மற்றும் சமூகப் பின்புலங்கள், எந்தவிதமான கலாச்சார யதார்த்தங்கள், இந்த அனைத்து பதிவுகளும் உள்ளே இருக்கின்றன. யாரோ ஒருவர் வித்தியாசமான குணாதிசயத்தோடு இருக்கிறார் என்றால், அவருக்குள் பதிந்திருக்கும் தகவலின் விதம் அதற்குக் காரணமாக உள்ளது. இதுதான் கர்மா எனப்படுவது. பாரம்பரியமாக இந்தத் தகவல்தான், கர்மா அல்லது கர்ம உடல் அல்லது வாழ்வை உருவாக்கும் காரண உடல் என்று அழைக்கப்படுகிறது

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1460531712930276"

     crossorigin="anonymous"></script>

கர்மாவின் வகைகள்

இந்தத் தகவல் பல வெவ்வேறு தளங்களில் இருக்கிறது. கர்மாவின் பரிமாணங்கள் நான்கு. அவற்றுள் இரண்டு, தற்போது தேவையில்லாதது. ஒரு புரிதலுக்காக, மற்ற இரண்டைக் குறித்து நாம் பேசலாம்.

சஞ்சித கர்மா

சஞ்சித கர்மா என்பது ஒன்று. இது ஓரணு விலங்கினம் மற்றும் உயிர் பரிணாமம் அடைந்த ஜடப் பொருள்களிலிருந்தும்கூட பின்னோக்கி செல்லும் கர்மக் கிடங்காக இருக்கிறது. எல்லாத் தகவSubscribகிறது. நீங்கள் உங்கள் கண்களை மூடி, போதிய விழிப்புணர்வோடு உங்களுக்குள் பார்த்தால், இந்த பிரபஞ்சத்தின் இயல்பை நீங்கள் உணரமுடியும். இதை நீங்கள், உங்கள் அறிவின் மூலம் பார்க்கிறீர்கள் என்பது அல்ல, உடலின் உருவாக்கத்திலேயே இந்தத் தகவல் பதிந்திருப்பதுதான் காரணம். படைப்பினுள் திரும்பிச் செல்லும் தகவல் கிடங்கு ஒன்று உள்ளது. அதுதான் உங்கள் சஞ்சித கர்மா. ஆனால், உங்கள் கிடங்கை வைத்துக்கொண்டு நீங்கள் சில்லறை வணிகம் செய்யமுடியாது. சில்லறை வணிகத்திற்கென ஒரு கடையை நீங்கள் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த வாழ்க்கைக்கான அந்த சில்லறை வணிகக் கடைதான் “பிராரப்தம்” என்று அழைக்கப்படுகிறது.


<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1460531712930276"

     crossorigin="anonymous"></script>

பிராரப்த கர்மா

பிராரப்த கர்மா என்பது இந்த வாழ்க்கைக்காக ஒதுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட அளவிலான தகவல். உங்கள் உயிரின் தீவிரத் தன்மையைப் பொறுத்து, எவ்வளவு தகவலைக் கையாளமுடியுமோ அதனை உயிரானது தனக்கென்று பங்கீடு செய்துகொள்கிறது. படைப்பானது மிகுந்த கருணையுடன் இருக்கிறது. உங்களுக்கு இருக்கின்ற ஒட்டுமொத்த கர்மாவையும் அது உங்களுக்கு வழங்கினால், நீங்கள் இறந்துவிடுவீர்கள். தற்போது, பலரும் இந்தப் பிறவிக் காலத்தின் 30-40 வருடங்களின் ஞாபகங்களினாலேயே சித்திரவதைக்கு ஆளாகிக்கொண்டுள்ளனர். அதைப்போல நூறு மடங்கு ஞாபகங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டால், அவர்களால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாது. இயற்கையானது, உங்களால் கையாளக்கூடிய ஒரு சிறு பகுதி ஞாபகத்தை, பிராரப்தாவாக ஒதுக்குகிறது.

கர்மாவின் தளைகளிலிருந்து விடுபடுங்கள்.

உங்களுக்கு எந்தவிதமான கர்மா இருந்தாலும், அது ஒரு வரம்புக்கு உட்பட்ட சாத்தியமாக இருக்கிறது என்பதுடன், அதுதான் உங்களை ஒரு வரம்புக்கு உட்பட்ட நபராகவும் உருவாக்குகிறது. நீங்கள் எந்தவிதமான பதிவுகளை உள்வாங்கினீர்கள் என்பதைப் பொறுத்து – அது வெறுப்பு மற்றும் கோபமாக இருக்கலாம், அல்லது அன்பு மற்றும் ஆனந்தமாக இருக்கலாம் - அதற்கேற்றதைப் போன்ற ஒரு குறிப்பிட்ட விதமான குணாதிசயத்தைப் பெறுகிறீர்கள். பொதுவாக ஒவ்வொரு மனிதரும் இவை எல்லாவற்றின் சிக்கலான கலவையாகத்தான் இருக்கிறார். இந்த கர்மக் கட்டமைப்பை ஒரு குறிப்பிட்ட கட்டத்தைக் கடந்து வளர்வதற்கு நீங்கள் அனுமதித்துவிட்டால், உங்களை ஓரளவிற்குமேல் ஆட்கொள்ள அனுமதித்தால், விடுதலை என்ற ஒரு விஷயம் உண்மையிலேயே இல்லாமல் போகிறது. நீங்கள் செய்யும் எல்லா செயல்களுமே கடந்த காலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. விடுதலையின் திசைநோக்கி நகர்வதற்கு நீங்கள் விரும்பினால், நீங்கள் செய்யவேண்டிய முதன்மையான விஷயங்களுள் ஒன்று என்னவென்றால், கர்மாவின் பிடியை தளர்த்தி அதன் தளையிலிருந்து விடுபடுவது அவசியமாகிறது. இல்லையென்றால் எந்த நகர்தலும் நிகழாது.


<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1460531712930276"

     crossorigin="anonymous"></script>


Comments

Popular posts from this blog