Posts

 கர்மா...?? என் வாழ்க்கை” என்று நீங்கள் எதைச் சொல்கிறீர்களோ அது ஒரு குறிப்பிட்ட அளவிலான தகவலால் கட்டுப்படுத்தப்படும், ஒரு குறிப்பிட்ட அளவுக்கான சக்தி. இந்தத் தகவல்களை இன்றைய வார்த்தைகளில் சாஃப்ட்வேர் (மென்பொருள்) என்று அழைக்கலாம். ஒரு குறிப்பிட்ட அளவு உயிர்சக்தியானது, ஒரு குறிப்பிட்ட அளவுக்கான தகவலுடன் சக்தியூட்டப்படுகிறது. இரண்டும் இணையும் இந்த தகவல் தொழில்நுட்பம்தான் ‘நீங்கள்‘ எனப்படுவது. உங்களுக்குள் எந்தவிதமான தகவல் செலுத்தப்பட்டிருக்கிறதோ அந்தக் குறிப்பிட்ட விதமான குணாதிசயம் கொண்டவராக நீங்கள் உருவாகிறீர்கள். இந்த உலகத்தில் நீங்கள் பிறந்த கணத்தில் இருந்து இந்தக் கணம் வரை, எந்தவகையான குடும்பம், வீடு, நண்பர்கள், நீங்கள் செய்த விஷயங்கள், செய்யாத விஷயங்கள் – இவை எல்லாமே உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உங்களின் ஒவ்வொரு எண்ணம், உணர்ச்சி, செயல் எல்லாமே உங்களுக்குள் நீங்கள் வைத்திருக்கும்  கடந்த காலப்  பதிவுகளிலிருந்தே வருகின்றன. தற்போது நீங்கள் யார்? என்பதை அவைகள் தீர்மானிக்கின்றன. நீங்கள் சிந்திக்கும் விதம், வாழ்வை எந்த விதத்தில் உணர்கிறீர்கள், புரிந்துகொள்கிறீர்கள் என்பதெல்லாம்